அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்த சத்யபாமாவைக் கண்டித்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுகவினர் ஒட்டியுள்ள கண்டன போஸ்டர்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
“அதிமுக தொண்டர்களின் வியர்வை சிந்திய உழைப்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ (MLA) ஆகிவிட்டு, தற்போது த.வெ.க (TVK)-வின் குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்யபாமா” என்று அந்த போஸ்டரில் மிகக் காரசாரமாக எழுதப்பட்டுள்ளது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுகவினர் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகளால், அந்தப் பகுதியில் தற்போது அதிமுக மற்றும் த.வெ.க தொண்டர்களிடையே கடும் அரசியல் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
