கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியபோது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கேள்வி கேட்ட இளைஞரைத் தவெக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அதிகாரத் திமிரோடு அவமானப்படுத்திப் பேசியுள்ளதாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பதிவில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

“நீ நல்லா சாப்பிட்டிருக்க” என்று அமைச்சர் பேசிய விதம் மிகவும் அசிங்கமான தோரணையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக, மக்கள் குறைகளைக் கேட்க வேண்டிய ஒரு அமைச்சரின் பொறுப்பு இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
<a href="http://

“>

மேலும், ‘கோட்’ திரைப்படத்தில் போக்குவரத்து காவலராக நடித்த கேரக்டர் மாதிரியே நிஜத்திலும் அமைச்சர் பேசி வருவதாக அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. இது ஒன்றும் சினிமா இல்லை என்பதை உணர்ந்து, மக்கள் பணியை கொஞ்சமாவது மதிக்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு எதிராக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை வலுவாகப் பதிவு செய்து வருகின்றனர்.