“பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் தன்னிச்சையாகப் பேசுகிறாரா? அல்லது முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதலோடுதான் பேசுகிறாரா?” என்று வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி எழுப்பியுள்ள கேள்வி புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின் தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாகக் கடுமையான அனலைக் கூட்டியுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய தி.மு.க அரசின் கொள்கை முடிவைப் பின்பற்ற வேண்டியதில்லை எனப் புதிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த அந்தர் பல்டிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரவிக்குமார், இந்த முடிவு மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு இத்தனை காலம் போராடிப் பெற்ற உரிமைகளைக் கைவிடுவது போன்றது மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என்று உணர்ச்சி பொங்கச் சாடியுள்ளார்.

த.வெ.க-வின் புதிய ஆட்சியில் மாநில சுயாட்சி உரிமைகள் சமரசம் செய்யப்படுகிறதா என்ற த்ரில்லிங்கான விவாதங்களுக்கு மத்தியில், வி.சி.க பொதுச்செயலாளரின் இந்த நேரடி அம்பு கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது!