“பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இனி இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது!” என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்திய தூதர் பர்வதநேனி ஹரீஷ் பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தின் போது, பாகிஸ்தான் தரப்பில் வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் நிராகரித்துத் தூள் தூளாக்கியுள்ளது. இந்தியாவின் மீது ‘ஆயிரம் காயங்களை ஏற்படுத்தி இரத்தம் சிந்த வைக்க வேண்டும்’ என்ற பாகிஸ்தானின் வன்மக் கொள்கை, ஐநா சாசனத்தின் மீதான அவர்களின் போலிப் பாசத்தை அம்பலப்படுத்திவிட்டதாகத் தூதர் ஹரீஷ் சாடியுள்ளார்.

மேலும், 1947 முதல் இந்தியா மீது பாகிஸ்தான் தொடுத்த தேவையற்ற போர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அவர்கள் நடத்தி வரும் நிழல் யுத்தத்தைச் சர்வதேசப் பதிவுகளோடு சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்றும், தனது நாட்டின் பாதுகாப்பிற்காக எந்தவொரு அதிரடி நடவடிக்கையையும் எடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

“>