அதிமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்த நடவடிக்கையை ஒரு ஆரோக்கியமான அரசியலாக விசிக கருதவில்லை என்று ஓப்பனாகத் தெரிவித்துள்ளார். இப்படித் தொடர்ந்து கட்சித் தாவுபவர்களை உடனே சேர்த்துக் கொள்வது தவெக-வின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், யார் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும் அவர்களை உடனே தங்களது கட்சியில் இணைத்துக் கொள்வது ஒட்டுமொத்தமாக தவெக மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தவெக தலைமை இதுபோன்ற கட்சித் தாவல் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் ஊக்கமளிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தவெக தலைமை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் திருமாவளவன் தனது மிக முக்கியமான வேண்டுகோளை அதிரடியாக வைத்துள்ளார்.
