சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள பிரபல கார் ஷோரூம் பொது மேலாளர் மீது, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் மை ஊற்றி, சரமாரியாகத் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மாருதி சுசுகி ஷோரூமில் அங்கித் ஆனந்த் என்பவர் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இங்கு பணிபுரியும் அம்ரிதா சிங் என்ற பெண் ஊழியர், மேலாளர் தனக்குத் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்ரிதா, அலுவலகத்திற்குள் புகுந்து மேலாளர் அங்கித் ஆனந்த் முகத்தில் மையை ஊற்றியதோடு, அங்கிருந்த போலீசாரின் முன்னிலையிலேயே அவரைச் சரமாரியாகத் தாக்கினார்.
View this post on Instagram
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி சத்யபிரகாஷ் திவாரி கூறுகையில், “பாதிக்கப்பட்ட அம்ரிதா சிங் தவிர, மேலும் 3 முதல் 4 பெண் ஊழியர்கள் அந்த மேலாளர் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை அளித்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்த அத்துமீறல் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
