இணையத்தில் வித்தியாசமான தோற்றம் கொண்ட விலங்குகள் வைரலாவது வழக்கம் தான் என்றாலும், வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் இரண்டு எருமை மாடுகள் தங்களின் தனித்துவமான பெயர்களால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளன.
டாக்காவில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் சுமார் 700 கிலோ எடை கொண்ட அல்பினோ வகை எருமையின் தலைமுடி அமைப்பு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சிகை அலங்காரத்தை அப்படியே ஒத்திருப்பதால் அதற்கு ‘டொனால்டு டிரம்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
<a href=”http://
Poor thing!
Bangladeshi buffalo upset by comparisons to Donald Trump😐
RT: A Bangladeshi buffalo that resembles Trump has lost its appetite after people flocked to see him. pic.twitter.com/6BnayVaJrY
— Iran in Russia (@IranembinRussia) May 22, 2026
“>
இதேபோல், நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் வளர்க்கப்படும் 750 கிலோவுக்கும் அதிக எடை கொண்டஒரு எருமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த எருமைகளின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றனவங்கதேசத்து எருமையின் தோற்றம் டொனால்டு டிரம்பை போல இருக்கும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்த ஈரான் நாடு, அமெரிக்க அதிபரை சர்வதேச அளவில் வம்புக்கு இழுத்துக் கிண்டல் செய்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஒன்றை ஈரானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “பாவம்..! டொனால்டு டிரம்புடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதால் அந்த வங்கதேச எருமை ரொம்பவே வருத்தமடைந்துள்ளது”
என்றும், “டிரம்பை போன்ற தோற்றமுடைய அந்த எருமையைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டதால், பயத்தில் அதற்குப் பசியே எடுக்கவில்லை” என்றும் செம்மையாகக் கலாய்த்துப்பதிவிட்டுள்ளது. அதிபர் டிரம்பை விமர்சிக்கும் நோக்கில் ஈரான் வெளியிட்டுள்ள இந்த விசித்திரமான பதிவு இப்போது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
