ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கர்ப்பிணியான 14 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். அங்கு அவர் வார்டு பகுதியில் உள்ள கழிப்பறைத் தொட்டியிலேயே பிரசவித்து விட்டு, யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றுள்ளார். ஆனால், கடுமையான தலைசுற்றல் காரணமாக மருத்துவமனை வளாகத்திலேயே சிறிது தூரத்தில் அவர் மயங்கி விழுந்தார். கழிவறையில் ரத்தம் சிதறி கிடப்பதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் கழிவறையை ஆய்வு செய்தபோது, அங்குள்ள தொட்டிக்குள் பச்சிளம் குழந்தை ஒன்று சிக்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்தப் பச்சிளம் குழந்தையையும், மயங்கிக் கிடந்த சிறுமியையும் மீட்ட போலீசார் அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து பேசிய காவல் நிலைய பொறுப்பாளர், தாயும் குழந்தையும் தற்போது நலமாக இருப்பதாகவும், சிறுமியின் வயது மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு குறித்து மிகவும் கவனமாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
