அமெரிக்காவின் குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் அதீத அமைதிக்கும், இந்தியாவின் எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படும் பரபரப்பான தெருக்களுக்கும் இடையே உள்ள பிரம்மாண்ட கலாச்சார வேறுபாடு குறித்து அமெரிக்கப் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவிற்கு வரும் இந்தியர்கள் பலரும், “இங்குள்ள மக்கள் எல்லாம் எங்கே போனார்கள்?” என்று தேடுவதாக அந்தப் பெண் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டன் ஃபிஷர்  என்ற அமெரிக்க உள்ளடக்கப் படைப்பாளர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அமெரிக்காவின் ஒரு குடியிருப்புப் பகுதியைக் காட்டும் அவர், அங்கு ஒரு மனிதர் கூட நடமாடாமல் தெருக்கள் முற்றிலும் வெறிச்சோடிக் கிடப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “அமெரிக்காவில் உள்ள ஒரு தெரு இப்படித்தான் இருக்கும். நீங்கள் பார்ப்பது போல, சுற்றிலும் ஒரு நபர் கூட இல்லை. எப்போதும் மக்கள் நடமாட்டமும், கடைகளும், சத்தமுமாக இருக்கும் இந்தியாவிலிருந்து இங்கு வரும் ஒருவருக்கு இது மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தரும். நான் அறிந்த பல இந்தியர்கள் அமெரிக்காவிற்கு வந்த புதிதில், ‘எல்லாரும் எங்கே போனாங்க?’ என்றுதான் ஆச்சரியமாகக் கேட்பார்கள். இங்கு மக்கள் சாதாரணமாகத் தெருக்களில் உலா வருவதில்லை என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kristen Fischer (@kristenfischer3)

இந்தத் தனிமைக்கு மக்கள் தொகை குறைவு என்பது காரணம் அல்ல, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும் ‘கார் கலாச்சாரமும்’ தான் காரணம் என்று கிறிஸ்டன் விளக்கியுள்ளார். அமெரிக்காவில் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்குக் கால்நடையாக வெளியே வருவதில்லை என்றும், சிறிய தூரத்திற்குக்கூட கார்களையே பயன்படுத்துவதால் தெருக்களில் மனித நடமாட்டம் அரிதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்: அமெரிக்கத் தெருக்கள் எங்களுக்கு மயான அமைதி போலக் காட்சியளிக்கின்றன. இந்தியாவின் பரபரப்பான மனித நடமாட்டத்தை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம்” என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

நான் 2010-ல் அட்லாண்டாவிற்கு குடிபெயர்ந்தேன். இந்தியாவின் அமைதியான பகுதியில் வளர்ந்த எனக்கு, அமெரிக்காவின் இந்த அதீத அமைதி காரணமாக முதல் ஒரு வாரம் தூக்கமே வரவில்லை என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். “நியூயார்க் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெருநகரங்களை ஒப்பிட்டால் இந்த நிலை இருக்காது, நீங்கள் கிராமப்புறப் பகுதிகளை ஒப்பிடுகிறீர்கள்” என்று சிலர் மாற்றுக்கருத்தையும் முன்வைத்துள்ளனர்.

கனடாவில் 5 ஆண்டுகள் வசித்துவிட்டுத் திரும்பிய ஒருவர், “மேற்கத்திய நாடுகளில் தனிமனித சுதந்திரம் இருந்தாலும், இந்தியாவைப் போன்ற ஒரு சமூகப் பிணைப்பும், உண்மையான நட்பும் அங்கு கிடைப்பதில்லை. அந்தத் தனிமை தாங்க முடியாமல் தான் நான் தாய்நாட்டிற்கே திரும்பிவிட்டேன்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.