பீகாரின் ஃபார்பிஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உயிரியல் ஆசிரியர் சி.கே. ராஜ், தனது மாணவர்களுக்கு ஊசி போடும் முறையைக் கற்றுக்கொடுக்க, தனது சொந்த உடலையே பரிசோதனைக் களமாகப் பயன்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட இந்த வீடியோவில், பயந்து நடுங்கும் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் மூலம் தனது கையில் ஊசி போட வைப்பதைக் காண முடிகிறது.
மேலும் ‘சயின்ஸின் உண்மையான சுவை, படிப்போடு வேடிக்கை’ என்ற நோக்கத்தில் அவர் இதைச் செய்தாலும், இது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
“>
இதனால் “மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முயற்சிக்கும் ஆசிரியர், இறுதியில் தனது உயிரையே பணயம் வைக்கப்போகிறார்” என்றும், “அடுத்ததாக அறுவை சிகிச்சை செய்யவும் கற்றுக்கொடுங்கள்” என்றும் கிண்டலாகவும் கோபமாகவும் கருத்துகள் குவிந்து வருகின்றன. ஆசிரியரின் இந்த விசித்திரமான செயல், கற்பித்தல் முறைகளில் இருக்க வேண்டிய பாதுகாப்பு எல்லைகள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
