நடிகை கங்கனா ரணாவத் கைகளில் பச்சை நிற வளையல்கள் மற்றும் கழுத்தில் தாலி அணிந்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டாரா என்ற விவாதம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும், “அந்த அதிர்ஷ்டசாலி மணமகன் யார்?” என்று ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி, இது குறித்து இணையத்தில் பல்வேறு யூகங்களை முன்வைத்தனர். இருப்பினும், இந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
View this post on Instagram
“>
இதனால் கங்கனா ரணாவத் தனது வரவிருக்கும் திரைப்படமான ‘குயின் 2’ படப்பிடிப்பிற்காகவே அத்தகைய பாரம்பரிய அலங்காரத்தில் இருந்ததாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா, தான் ரகசியமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், அந்தத் தோற்றம் தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு தளம் சார்ந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
