பெங்களூரு, ராமமூர்த்தி நகர் என்.ஆர்.ஐ லேஅவுட் பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடத்தின் உச்சியிலிருந்து 16 வயது சிறுமி ஒருவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கட்டிடத்தின் விளிம்பில் ஆபத்தான முறையில் நிற்பதைக் கண்ட அங்கிருந்த இரண்டு நல்நெஞ்சங்கள், உடனடியாக ஓடிச்சென்று சிறுமியிடம் சாதுரியமாகப் பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பித் தடுத்து நிறுத்தினர்.
பெங்களூரு, ராமமூர்த்தி நகர் என்.ஆர்.ஐ லேஅவுட்டில்
16 வயது சிறுமி ஒருவர் 5 மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதிக்க முயன்றார்.
அங்கிருந்த இரண்டு பேர் தடுத்து முதலில் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.1/2 pic.twitter.com/mm3UWE6O6B— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) May 21, 2026
இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், சிறுமி எதிர்பாராத நேரத்தில் அதிரடியாகவும் லாவகமாகவும் செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்டனர். மயிர்பிரேயத்தில் சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்ட இந்த சிலிர்க்க வைக்கும் மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சரியான நேரத்தில் செயல்பட்ட பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
