சமூக ஊடகங்களில் தினமும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களைப் பெருமளவில் சிரிக்க வைத்து வருகிறது. அந்த வீடியோவில், சிக்கன் சாப்பிட ஆசைப்படும் ஒரு நபர், தன்னிடம் முழுப் பணம் இல்லாததால் கடைக்காரரிடம் தனது கஷ்டத்தைக் கூறுகிறார்.

இதைக் கேட்ட அந்தப் பிராங்க்  கடைக்காரர், உடனே ஒரு சுவாரசியமான யோசனையைக் கூறுகிறார். அதாவது, ₹200 மதிப்புள்ள அந்தக் கோழியை ‘இஎம்ஐ’ எனப்படும் மாதத் தவணை முறையில் அந்த நபருக்கு விற்க அவர் சம்மதிக்கிறார்.

அதன்படி, அந்த நபர் முன்பணமாக ₹80 கொடுத்துவிட்டு, மீதித் தொகையைத் தினமும் ₹20 என்ற கணக்கில் தவணையாகச் செலுத்த ஒப்புக்கொண்டு கோழியை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். ‘digitalaqilkhan’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, முழுக்க முழுக்க வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட ஒரு பிராங்க் வீடியோ ஆகும்.

 

View this post on Instagram

 

A post shared by Mohd Aqil Khan (@digitalaqilkhan)

“>

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “இனிமேல் கோழி சாப்பிடக் கூட இஎம்ஐ கட்டணுமா?” என்று நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். இணையத்தில் வைரலாகும் இந்த வேடிக்கையான தவணை முறைத் திட்டம் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.