சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் மனிதநேயத்தை பறைசாற்றும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது எக்ஸ் (ட்விட்டர்) வலைதளத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் இதயங்களையும் வென்று அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில், தங்களது எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கவர்ந்த அந்த இரண்டு சிறுவர்கள், சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது வாலிபர்களாக வளர்ந்து தங்களது பழைய நினைவுகளைத் தேடிச் சென்றுள்ளனர்.
காக்கா முட்டை படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தாங்கள் எந்த வீட்டில் தங்கி நடித்திருந்தார்களோ, அதே வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து அந்தப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். அவர்கள் அங்கு சென்றபோது, தற்போது அந்த வீட்டில் வசிக்கும் பெண்மணி, அந்த இளைஞர்களை அடையாளம் கண்டு கொண்டு பாசத்துடன் வரவேற்றது மட்டுமன்றி, அவர்களுக்கு அன்போடு உணவு கொடுத்து உபசரித்துள்ளார்.
'காக்க முட்டை' வீட்டை கண்டு புடிச்சிட்டோம். – "Kaaka Muttai Boys" 😯❤️ pic.twitter.com/VOBPq4R7dH
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) May 20, 2026
இந்த அழகான மற்றும் நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வீடியோ தான் இப்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. காலங்கள் உருண்டோடினாலும் மாறாத அந்தப் பழைய நினைவுகளும், அந்தப் பெண்ணின் அக்மார்க் கிராமத்து உபசரிப்பும் பார்ப்பவர் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளதாக நெட்டிசன்கள் உருகி கமெண்ட் செய்து வருகின்றனர்.
