தமிழக நடப்பு சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யை, பிரபல திரைப்பட நடிகர் சிபி சத்யராஜ் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அவர், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமக்கு அறிமுகமான அண்ணன் விஜய், இவ்வளவு பெரிய அரசியல் உயரத்தைத் தொட்ட பின்னரும் அவரது அசாத்திய எளிமை, பணிவு மற்றும் கனிவான குணங்களில் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருப்பதாகப் பாராட்டியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய்யின் நல் ஆரோக்கியத்திற்கும், அவரது தலைமையிலான புதிய தமிழக அரசின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட சிபி சத்யராஜின் இந்த வாழ்த்துப் பதிவு, தற்போது இணையதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
Super happy to have met our Honourable Chief Minister @TVKVijayHQ Anna today to congratulate him on his massive victory in the TN 2026 elections. Having had the privilege of knowing him for almost two decades, I can proudly say that his humility, warmth, and simplicity have… pic.twitter.com/cGeOyGGW3v
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) May 20, 2026
“>
