தமிழக அமைச்சரவையில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட உள்ள நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா நாளை (மே 21, வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) நடைபெற உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதை அடுத்து, சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், புதிய அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.
இந்த விழாவில் முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், யார் யாருக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
