தளபதி விஜய் கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தொடக்கத்தில் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் உட்படப் பலரும் இவருடைய அரசியல் வருகையைக் குறைத்து மதிப்பிட்ட நிலையில், இந்த அசாத்திய வெற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கருத்துக்களைத் தைரியமாகப் பகிர்ந்து வரும் பிரபல நடிகை வினோதினி, அண்மையில் எக்ஸ் (X) தளத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை இட்டிருந்தார்.

தமிழகத்தில் நடக்கும் குற்றச் செயல்களைச் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்ற பாணியில் அவர் பதிவிட்டிருந்த கருத்து இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியது. வினோதினியின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ஆதரவாளர் ஒருவர், “கடந்த 5 வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள், அப்போது ஏன் கேள்வி கேட்கவில்லை?” என்று எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சற்றும் யோசிக்காமல் உடனடியாகப் பதிலளித்த நடிகை வினோதினி, “அப்படியென்றால் இப்போது நீங்கள் ஆட்சியில் இருப்பது சரியான மாற்றம் இல்லை என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் தானே?” என்று நறுக்கெனக் கேட்டு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

“>

 

நடிகை வினோதினியின் இந்த அதிரடியான பதில் மற்றும் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்த விவாதங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.