பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை வங்கதேச வீரர்கள் சினிமா பாணியில் கலாய்த்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இப்போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 437 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வரும் நிலையில், அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தவித்து வருகிறது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் அரைசதம் அடித்து நங்கூரம் போல் நின்ற முகமது ரிஸ்வான், நான்காம் நாள் ஆட்டம் முடியும் நேரத்தில் வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்க (டைம்பாஸ்) முயன்றுள்ளார்.

இதைக் கவனித்த வங்கதேச வீரர்கள், பாலிவுட் காமெடி மீம் வசனமான “50 ரூபாயை கட் பண்ணுங்க ஓவர் ஆக்டிங்கு…” என்பது போல, ரிஸ்வான் நடுவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரைச் சுற்றிலும் செம அனிமேட்டடாக ஆக்டிங் செய்து மரண பங்கம் செய்துள்ளனர்.

இதனால் செம கடுப்பான ரிஸ்வான் அம்பயரிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லாத நிலையில், இந்த நகைச்சுவையான ஸ்லெட்ஜிங் சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.