காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகியான அலீம் அல் புகாரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று முறைப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தார்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலீம் புகாரி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதாவது கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் பயணித்த நிலையில் சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது. மேலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியது அந்த கட்சியில் இருந்த சிலருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் பல முக்கிய நிர்வாகிகள் விலகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
