தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு மாஸ் வெற்றி பெற்றுள்ள தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத், தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அதிரடியாகத் திறந்து வைத்துள்ளார். திறப்பு விழாவைத் தொடர்ந்து தொகுதி மக்களை நேரில் சந்தித்த அவர், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதிக்குள் இருக்கும் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளில் தான் நேரடியாகச் சென்று தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிரடி காட்டினார்.
தொடர்ந்து ஊழல்வாதிகளுக்கு மரண எச்சரிக்கை விடுத்த ஸ்ரீநாத், “நம்முடைய தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பெயரையோ அல்லது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி யாராவது கலெக்ஷனிலோ, அநாகரிகமான ஊழல் நடவடிக்கைகளிலோ ஈடுபட்டால் சும்மா விடமாட்டேன். அப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான ஆக்ஷனும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளும் பாயும்” என்று அக்னிப் பிழம்பாய் எச்சரித்துள்ளார். தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத்தின் இந்த அதிரடி ஆக்ஷன் பிளான் தூத்துக்குடி மக்கள் மத்தியில் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
