தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், தவெக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் எடுத்து வரும் நிர்வாக ரீதியான அதிரடி மாற்றங்களைப் பார்த்து பாஜக பிரமுகர் அர்ஜூனமூர்த்தி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கோட்டை வட்டாரத்தில்  சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

“தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய நிர்வாக மாற்றத்தின் வெளிப்பாடாக தற்போது செயல்பட்டு வரும் தவெக அரசாங்கத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறேன்” என்று ஓப்பனாகத் தெரிவித்துள்ள அவர், கடந்த 60 ஆண்டுக்கால திராவிட ஆட்சிகளில் விஏஓ முதல் செயலாளர் வரை, காவலர் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை கட்சி பாகுபாடும் துவேஷமும் ஊடுருவி இருந்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “மாற்றம் என்பது வெறும் அரசியல் மாற்றமாக இல்லாமல், அரசாங்கத்தின் செயல்முறை மாற்றமாக இருக்க வேண்டும் என்று நான் முன்பே நம் அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களிடம் பகிர்ந்துள்ளேன்; இன்று தகுதியும் திறனும் கொண்ட அனுபவமிக்க நிர்வாகிகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி, மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆட்சிமுறையை உருவாக்கும் முதலமைச்சர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியோடு பாராட்டியுள்ளார்.

“>