பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காக்டெய்ல் 2’ திரைப்படத்தின் பிரம்மாண்ட பாடல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு அரங்கேறிய நிலையில், மேடையில் சக நடிகை கிருதி சனோனைப் பாராட்டிப் பேசப் போய் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா தற்செயலாக ஒரு கெட்ட வார்த்தையை  உதிர்த்த சம்பவம் ஒட்டுமொத்த இணையதளங்களையும், சோசியல் மீடியாவையும் அதிர வைத்துள்ளது.

தயாரிப்பாளர் தினேஷ் விஜன், இயக்குநர் ஹோமி அடஜானியா, இசையமைப்பாளர் ப்ரிதம் மற்றும் படத்தின் நாயகன் ஷாஹித் கபூருடன் செம்ம கவர்ச்சியான உடையில் கலந்துகொண்ட ராஷ்மிகா, கிருதி சனோனின் அழகைப் புகழ்ந்து தள்ளியபோது, “நீங்கள் செம கவர்ச்சியாக இருக்கிறீர்கள்.. அது இந்த உலகத்திற்கே தெரியும்.. நீங்கள் உண்மையிலேயே செம ‘கவர்ச்சி என்று எதார்த்தமாகப் பேசிவிட்டு, அடுத்த நொடியே பதறிப்போய் தன் வாயைப் பொத்திக்கொண்டு, “ஓ மை காட், என்னை மன்னிச்சிருங்க! அதை கட் பண்ணிடுங்க!” என்று வேடிக்கையாகக் கெஞ்சினார்; ராஷ்மிகாவின் இந்த கியூட்டான ‘பகீர்’ எக்ஸ்பிரஷனைப் பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்களும் ஊடகத்தினரும் அரங்கமே அதிரும் அளவுக்கு கலகலவெனச் சிரித்து ஆரவாரம் செய்தனர்.

“>

 

தொடர்ந்து ஷாஹித் கபூருடன் தங்களுக்குள் இருக்கும் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி மற்றும் படத்தில் கிருதியின் மாயாஜால நடிப்பு குறித்துப் பேசிய ராஷ்மிகா, “இது வெறும் பனிப்பாறையின் நுனி மட்டும்தான், படம் ரிலீஸான பின்னாடி தியேட்டரே அதிரப்போகுது” என்று அனல் பறக்கப் பேசியுள்ள வீடியோ தான் இப்போது பாலிவுட் டூ கோலிவுட் வரை தாறுமாறான ரீச் கொடுத்து ட்ரெண்டாகி வருகிறது.