மத்திய அரசின் மிக முக்கிய கல்வித் திட்டமான ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து, அரசு ரீதியாக விரிவாக ஆலோசித்து அதன் பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும் என தவெக அரசின் அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், கல்வித்துறையின் மேம்பாடு மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தவெக அரசு அனைத்து கோணங்களிலும் பரிசீலனை செய்து நல்லதொரு முடிவை அறிவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், மொழிக் கொள்கை குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை எப்போதுமே ‘இருமொழிக் கொள்கை’ தான் என்பதில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உறவுகளுடன் பேச தமிழ் மொழி உலகத்துடன் பேச ஆங்கில மொழி என தமிழ் இரு மொழிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்கிற தவெக அரசின் இந்த அதிகாரப்பூர்வ விளக்கம், மும்மொழி கொள்கை குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளதுடன், தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.