தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி, 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் பாதுகாப்பாகவும், தூய்மையான சூழலிலும் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்யும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மற்றும் தேவையான முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப கல்வித்துறையும், பள்ளி நிர்வாகங்களும் தற்போது பணிகளை விறுவிறுப்பாக முடுக்கிவிட்டுள்ளன.
