தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது கட்சி எம்எல்ஏ-க்களை வளைப்பதற்காக அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பதவி ஆசையால்தான் சிலர் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், அதிமுக உறுப்பினர்களைத் தமிழக வெற்றிக் கழகம் விலைக்கு வாங்கி வருவதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, மற்ற கட்சிகளை உடைப்பதுதான் விஜய்யின் அரசியலா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
