சட்டமன்றத்தில் இன்று தவெக அரசு தனது பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகத்தைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “ஆதரவு தெரிவிக்கிறோம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்” எனத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

​தொடர்ந்து ஒரு செய்தியாளர், “நீங்கள் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்தால் எடப்பாடி பழனிசாமி உங்கள் மீது நடவடிக்கை எடுப்பாரே?” எனக் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் கடும் கோபமடைந்த சி.வி.சண்முகம், “அதெல்லாம் வேண்டாம்.. நாங்க பார்த்துக்கிறோம்” என மிகக் கடுமையாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவெனச் சென்றார். அதிமுக தலைமைக்கு எதிராகவே சி.வி.சண்முகம் வெளிப்படையாக அதிரடி காட்டியிருப்பது, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.