தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக-வில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுகவில் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தனித்தனியாகச் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கையெழுத்துக்கள் இருப்பதால், சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவே அதிமுக-வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
ஒருவேளை தவெக ஆட்சிக்கு ஆதரவாக 30 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தால், அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறியதாகக் கருதப்பட்டு, அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பதவி பறிபோகும் அபாயமும் உள்ளது. இதனால் கோட்டை வட்டாரத்தில் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
