புனே – சுபால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது கர்ப்பிணி பெண் ருக்ஸானா খাতூனுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ரயிலின் பொதுப் பெட்டியில் அவர் வலியால் துடித்ததைக் கண்ட சக பயணிகள் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (RPF) தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து மின்னல் வேகத்தில் வந்த காவலர்கள் சோம்நாத் பாட்டடே மற்றும் விஸ்வஜித் காகடே ஆகியோர், ஓடும் ரயிலிலேயே சக பயணிகளின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க உதவினர்.
📺WATCH | Pregnant woman safely delivered a baby aboard the Pune–Supaul Express after swift assistance from RPF personnel and fellow passengers pic.twitter.com/lXmbEFAjD7
— The Tatva (@thetatvaindia) May 12, 2026
அனைவரின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது போல, ரயிலிலேயே அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தாயும் சேயும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இக்கட்டான சூழலில் பதற்றமடையாமல் செயல்பட்டு இரு உயிர்களைக் காப்பாற்றிய ஆர்.பி.எப் வீரர்களின் இந்தச் செயலை ‘ஆபரேஷன் சக்தி’ திட்டத்தின் கீழ் ரயில்வே நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
