மும்பையில் பணிபுரிந்து வந்த புனேவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போதே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றபோது, அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் கதறி அழுது அவளைக் காப்பாற்றத் துடித்துள்ளார்.

ஆனால், அதே வீடியோ காலில் மகளின் மரணத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தந்தை, எவ்விதமான வருத்தமும் இன்றி சிரித்துக்கொண்டே கைதட்டியது பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. இந்தக் கொடூரமான செயல் மனிதநேயமற்றது எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குடும்பத் தகராறு மற்றும் தந்தையின் தொடர்ச்சியான மன உளைச்சலே அந்தப் பெண்ணின் இந்தத் தீவிர முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெற்ற மகளின் மரணத்தை ஒரு தந்தை இவ்வளவு குரூரமாகக் கொண்டாடியது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தத் தந்தையின் நடத்தை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.