மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர், மும்பை உணவை விட பெங்களூரு உணவு சிறந்தது என்று பாராட்டிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் தான் சாப்பிட்ட உணவை “பூலோக சொர்க்கம்” என்று வர்ணித்துள்ள அவர், அங்குள்ள சுவை மற்றும் தரம் தன்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுவாக மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையே சிறந்த உணவு எது என்ற போட்டி எப்போதும் நிலவும் சூழலில், மும்பையைச் சேர்ந்த ஒருவரே பெங்களூரு உணவை உயர்த்திப் பேசியிருப்பது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வைரல் வீடியோவில், பெங்களூருவின் பாரம்பரிய உணவகங்களில் கிடைக்கும் சிற்றுண்டிகள் மற்றும் அவற்றின் தனித்துவமான சுவை குறித்து அவர் சிலாகித்துப் பேசியுள்ளார். குறிப்பாக, பெங்களூருவின் மசாலா தோசை மற்றும் காபி போன்ற உணவுகள் மும்பையில் கிடைப்பதை விட மிகச் சிறப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
