தெலங்கானா மாநிலத்தில் பார்ப்போர் மனதை கலங்க வைக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை தந்தை மற்றும் மகன் பார்த்துள்ளனர்.
கன்றுக்குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற மனிதாபிமானத்தில், இருவரும் கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் இறங்கி கன்றுக்குட்டியைப் பத்திரமாக மீட்டனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக கன்றுக்குட்டியை மேலே கொண்டு வந்த பிறகு, கிணற்றுக்குள் இருந்த தந்தையைக் காப்பாற்ற மகனும் கிணற்றில் குதித்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக இருவரும் கிணற்றுக்குள்ளேயே மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வாயில்லா ஜீவனைப் பிழைக்க வைக்கப் போய், சொந்த உயிரையே தியாகம் செய்த தந்தை மற்றும் மகனின் மரணம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
