தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் அதிமுக இந்த முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மீது அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது‌.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 11 வது தோல்வியை சந்தித்ததால் அவர் பதவி விலக வேண்டும் என சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் இதனால் கட்சி தனி தனியாக செயல்படுவதாகவும் கூறப்பட்ட சி.வி சண்முகம் தலைமையிலான 32 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது.

இந்த தகவல்களை உண்மையாக்கும் வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும் எஸ்‌.பி வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் இன்னொரு பிரிவினர் சட்டசபைக்கு தனியாகவும் வந்தனர்.

அதே நேரத்தில் சி.வி சண்முகம் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில் திடீரென பாதியிலே கிளம்பி சென்று விட்டார். அதன் பிறகு எஸ்பி வேலுமணி பதவி ஏற்பதற்கு முன்பாக முதலமைச்சர் விஜய்க்கு வணக்கம் சொல்லிவிட்டு அவர் பதவியேற்றதும் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறியுள்ளது. மேலும் இந்த நிலையில் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 30 அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுக்க இருப்பதாகவும் இதில் 8 பேர் அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதனால் தமிழக அரசியல் களம் இன்னும் இரண்டு நாட்களுக்கு பரபரப்பாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.