தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முஸ்லிம் லீக் கட்சி போன்றவைகள் ஆதரவு கொடுத்ததால் 120 என்ற பெரும்பான்மையை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆக விஜய் பொறுப்பேற்று கொண்ட நிலையில் இன்று நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நாளை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் தற்காலிகமாக கருப்பையா சபாநாயகர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.

நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்க இருக்கிறார்கள். இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய சட்டமன்ற குழு தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு நிலையில் திமுக தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு துணை தலைவராக கே என் நேருவும் கொறடாவாக எ.வ. வேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் திமுகவின் சார்பில் தற்போது உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அந்த கட்சி வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
