தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு எனது வாழ்த்துகள்.

இலங்கையும் தமிழ்நாடும் வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் நீண்டகாலத் தொடர்புகளைக் கொண்டவை. தலைமுறை தலைமுறையாக இரு நாட்டு மக்களிடையே நிலவி வரும் ஆழமான பிணைப்புகள் நம்மை ஒன்றிணைக்கின்றன.

புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். தமிழக மக்களுக்கும், புதிய அரசுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன் என அதிபர் அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.