தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “C. ஜோசப் விஜய் எனும் நான்…” என விஜய்யின் எதிர்கால உறுதிமொழியைச் சுட்டிக்காட்டிய குஷ்பு, “வாழ்த்துக்கள் முதலமைச்சர் அவர்களே” எனப் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் இந்த அரசியல் வெற்றியை மனதாரப் பாராட்டியுள்ள குஷ்புவின் இந்தப் பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இருவருக்கும் இடையே உள்ள நட்பையும், அரசியல் கடந்த மரியாதையையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.