தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் அவருக்கு வழங்கியுள்ள ஆலோசனைக் கலந்த அறிவுரை அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், ஒரு நிலையான ஆட்சியை வழங்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க திராவிடக் கட்சிகளின் ஆதரவு ஒருவேளை தேவைப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்ட வேண்டாம் என அந்த நடிகை விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார்.
“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என்றால், அதற்கான ஆதரவு யாரிடமிருந்து வந்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதுதான் சாதுர்யம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் களம் இறங்கிய விஜய்க்கு, இப்போது அதே பாணியிலான கட்சிகளின் ஆதரவு குறித்து வந்துள்ள இந்த அட்வைஸ், தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
