ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிசிசிஐ (BCCI) அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

நடப்பு சீசனில் வீரர்கள் தங்களின் காதலிகளுடன் பொது இடங்களுக்குச் செல்வதற்கும், மைதானங்களுக்கு அழைத்து வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற முன்னணி வீரர்கள் பிசிசிஐ-யின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர்.

இவர்களது காதலிகள் சமூக வலைதளங்களில் பிரபலமான ‘இன்புளுயன்சர்களாக’ இருப்பதால், வீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அணியின் ரகசியத் தகவல்கள் அல்லது உத்திகள் தெரியாமல் வெளியே கசிந்துவிடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய முக்கியத் தகவல்கள் கசிவதைத் தவிர்க்கவே இத்தகைய ரகசியக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. பிசிசிஐ-யின் இந்த திடீர் முடிவால் இளம் வீரர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.