மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மஹிகா சர்மாவுடன் ராய்ப்பூர் வந்தடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அணிக்கு எதிரான முக்கியமான ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, அணியுடன் வராமல் ஹர்திக் பாண்டியா தனியாக வந்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
விமான நிலையத்திலிருந்து தனது காதலியின் தோளில் கை போட்டபடி வெளியே வந்த அவர், பலத்த பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். முன்னதாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் விளையாடாத நிலையில், தற்போது ராய்ப்பூர் வந்துள்ளதால் பெங்களூரு அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
தற்போது ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 3 வெற்றிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால், மே 10-ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
Hardik Pandya arrived in Raipur with his girlfriend yesterday. pic.twitter.com/rvwmRj3Y2Y
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) May 8, 2026
“>
இதைத்தொடர்ந்து பஞ்சாப், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுடனும் மும்பை மோத உள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இணைந்திருப்பது மும்பை ரசிகர்களுக்குப் பெரிய நம்பிக்கையைத் தந்துள்ள போதிலும், காதலியுடன் அவர் ராய்ப்பூர் வந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
