தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, பொதுக்கூட்டம் ஒன்றில் மிக சரளமாக இந்தியில் பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. எனது கட்சியைப் பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று அவர் பேசிய விதம், மொழிகளைக் கடந்து அனைவரையும் சென்றடைந்துள்ளது.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரதிநிதி, வட இந்திய மொழியான இந்தியை இவ்வளவு துல்லியமாகவும், தெளிவான உச்சரிப்போடும் பேசுவதைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளையும் கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
We got to see a Tamil Nadu regional political party leader give an interview in Hindi before GTA 6. pic.twitter.com/0T1T6gCBgG
— Mona Shandilya (@RoseTint4) May 7, 2026
“>
இதனால் பொதுவாகத் தமிழக அரசியலில் மொழிப்பற்று முக்கிய இடம்பிடித்துள்ள நிலையில், கீர்த்தனாவின் இந்த முயற்சி தேசிய அளவில் கட்சியை அடையாளப்படுத்த உதவும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பிற மாநிலத்தவர்களுடனும் நேரடியாக உரையாடும் வகையில் அவர் வெளிப்படுத்திய இந்தத் தனித்திறமை, இணையவாசிகளிடையே அவர் மீதான நன்மதிப்பை உயர்த்தியுள்ளது.
