தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் தற்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால், திமுக-காங்கிரஸ் இடையேயான நீண்டகால கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ளது.
இந்த நிலையில், மக்களவையில் திமுக எம்.பி-க்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளை மாற்றக்கோரி திமுக எம்.பி. கனிமொழி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “மாறி வரும் அரசியல் சூழலால் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகே திமுக எம்.பி-க்கள் அமருவது இனி சரியாக இருக்காது.
எங்களுக்குத் தனியாக இருக்கைகளை ஒதுக்க வேண்டும்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியலில் நிலவும் இந்த உச்சகட்டப் பகை, இப்போது நாடாளுமன்றத்தின் இருக்கை வரிசை வரை சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
