தளபதி விஜய்யின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய், தனது பள்ளிப் பருவத்தில் ஒரு சராசரி மாணவராகவே இருந்துள்ளார் என்பதை இந்த மதிப்பெண் பட்டியல் காட்டுகிறது. குறிப்பாக, கணிதப் பாடத்தில் அவர் வெறும் 30 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், தனது தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், விடாமுயற்சியால் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு மாபெரும் ஆளுமையாக அவர் உயர்ந்து நிற்பது பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்த மதிப்பெண் பட்டியலில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விஜய் கணிதத்தில் பின்தங்கியிருந்தாலும், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார்.
இதனால் மற்ற பாடங்களை விட தமிழில் 65 மதிப்பெண்கள் எடுத்து அந்தப் பாடத்தில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது அரசியலில் தடம் பதித்துள்ள விஜய், தனது கட்சியின் பெயரிலும் கொள்கையிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், பள்ளி காலத்திலேயே அவருக்குத் தமிழ் மீது இருந்த ஆர்வம் இந்த மதிப்பெண் சான்றிதழ் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
