தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் ஜோதிடர் ரதன் பண்டிட் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது, தவெக தலைவர் விஜய்க்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்டாலின் மீது விஜய் வைத்திருக்கும் தனிப்பட்ட மரியாதையையே இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய்யின் வெற்றியைத் துல்லியமாகக் கணித்திருந்த ரதன் பண்டிட்டின் இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  இதற்கிடையே, விஜய்யின் அமைச்சரவையில் மொத்தம் 20 அமைச்சர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.