தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், ‘கோட்’ பட இயக்குநர் வெங்கட் பிரபுவை ரசிகர்கள் ஒரு தீர்க்கதரிசி எனப் பாராட்டி வருகின்றனர்.
அந்தப் படத்தில் விஜய் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டில் ‘TN07 CM 2026’ என்று இருந்ததைச் சுட்டிக்காட்டி, விஜய் முதல்வர் ஆவதை வெங்கட் பிரபு அன்றே கணித்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், கட்சியின் சின்னமாக ‘விசில்’ அறிவிக்கப்பட்டபோது, ஆரம்பத்தில் தாங்கள் விமர்சித்த ‘விசில் போடு’ பாடலுக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் ரசிகர்கள் மன்னிப்பு கேட்டு, தற்போது அவருக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
மகனின் இந்த மாபெரும் வெற்றியைக் கண்டு தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும், தாய் ஷோபாவும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தன் மகன் அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற எஸ்.ஏ.சியின் நீண்ட கால கனவு நனவாகியுள்ள நிலையில், அவர் திருத்தணி முருகன் கோவிலில் செய்த பிரார்த்தனை பலன் கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.
😂🤣😂🤣😂🙏🏽🙏🏽🙏🏽 https://t.co/CW1cS8LB0L
— venkat prabhu (@vp_offl) May 4, 2026
“>
இதேபோல், நடிகை த்ரிஷா திருப்பதி கோவிலுக்குச் சென்று விஜய்க்காக வேண்டியதுடன், தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருத்தணி மற்றும் திருப்பதி வேண்டுதல்கள் கைமேல் பலன் கொடுத்துவிட்டதாகக் கூறி தளபதி ரசிகர்கள் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
