தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றி கழகம் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் அவருக்கு திரையதுறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவர் பற்றிய சர்ச்சைகள் சமீப காலமாகவே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக ரிசல்ட்  வரும் நிலையில் தர நடிகை திரிஷா நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

 

இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை திரிஷா தற்போது விஜயின் இல்லத்திற்கு காரில் சென்றார். மேலும் நடிகர் விஜய்யை அவரது மனைவி சங்கீதா விவாகரத்து செய்த நிலையில் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் திரிஷா விஜய்யின் வீட்டிற்கு சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.