தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் தற்போது இன்று காலை 11:05 நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம் கிட்டத்தட்ட 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கட்சி 77 இடங்களிலும் திமுக 53 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் தற்போது வரை நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட முன்னிலை கிடைக்கவில்லை.
