ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான மோதல் ரசிகர்களை நுனி இருக்கையில் அமர வைத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் ஹென்ரிக் கிளாசன் கொடுத்த கடினமான கேட்ச்சை, கொல்கத்தா வீரர் ரோவ்மன் பவல் சுமார் 15 மீட்டர் தூரம் ஓடி வந்து, காற்றில் பறந்து ஒற்றை கையில் பிடித்த விதம் மைதானத்தில் இருந்த 55,000 ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

கேமரூன் கிரீன் வீசிய 11-வது ஓவரில் நடந்த இந்தச் சம்பவத்தால், 11 ரன்கள் எடுத்திருந்த கிளாசன் வெளியேற, ஐதராபாத் அணிக்கு அது பலத்த அடியாக அமைந்தது.

ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் (61 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (42 ரன்கள்) அதிரடி காட்டினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தற்போது 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.