ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி மற்றும் விளையாட்டுத் தொகுப்பாளர் யேஷா சாகர் ஆகியோரைச் சுற்றி ஒரு புதிய சர்ச்சை இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. யேஷா சாகரின் இன்ஸ்டாகிராம் பதிவை சமீர் ரிஸ்வி லைக் செய்ததுதான் இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
சமீபத்தில் மதம் மாற்றம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் வெளியிட்ட பதிவு, யாரைக் குறிப்பிடுகிறது என்று தெரியாமல் இருந்த நிலையில், சமூக வலைதளவாசிகள் அந்தப் பதிவை இந்த இருவருடனும் இணைத்து வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர். எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில், இந்தச் சிறிய செயல் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
<a href=”http://
उत्तर प्रदेश के एक मुस्लिम क्रिकेटर का एक हिंदू महिला एंकर (चैनल की नहीं, लीग में एंकरिंग करने वाली) से अफेयर चल रहा है। एंकर की एक दोस्त ने बताया क्रिकेटर कहता है कि जब तक मैं प्रैक्टिस करके आता हूं तब तक आयतें याद कर लो। वो कहता है कि अब तुम किसी क्रिकेटर से हाथ नहीं मिलाओगी।…
— Abhishek Tripathi / अभिषेक त्रिपाठी (@abhishereporter) April 30, 2026
“>
சமூக வலைதளங்களில் இந்த வதந்திகள் வலுப்பெற்று வரும் போதிலும், சமீர் ரிஸ்வி அல்லது யேஷா சாகர் தரப்பிலிருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருவரும் இந்த விவகாரத்தைத் தவிர்த்து வரும் நிலையில், சரிபார்க்கப்படாத தகவல்களே இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் காலத்தில் ஒரு சாதாரண ‘லைக்’ கூட எவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக மாறியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், மைதானத்திற்கு வெளியே நடக்கும் இந்தச் சம்பவமும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
