காட்டின் ராஜாவாகக் கருதப்படும் புலியிடம் இருந்து தப்பிப்பது என்பது எந்த ஒரு விலங்குக்கும் எளிதான காரியம் அல்ல. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறிய வாத்து தனது அபாரமான சமயோசித புத்தியால் ஒரு புலியையே ஏமாற்றித் தப்பியுள்ளது.

தண்ணீருக்குள் நீந்திக் கொண்டிருந்த வாத்தை வேட்டையாடப் புலி மெதுவாக நெருங்கி, பாய்வதற்குத் தயாரான அந்த நொடியில், வாத்து சத்தமில்லாமல் தண்ணீருக்குள் மூழ்கித் தலைமறைவானது.

 

View this post on Instagram

 

A post shared by vikashkirar161214 (@vikash_kirar161214)

வாத்து எங்கே போனது என்று தெரியாமல் புலி குழப்பத்துடன் தேடிக்கொண்டிருக்க, சிறிது தூரம் தள்ளி வாத்து பத்திரமாக வெளியே வந்து புலிக்குத் ‘தண்ணி காட்டியது’.

பலம் மட்டுமே வெற்றியைத் தராது, சரியான நேரத்தில் பயன்படுத்தும் புத்திசாலித்தனமே உயிரைக் காக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் “வாத்து வேற லெவல்” எனப் பாராட்டி வருகின்றனர்.