ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி விஜயலட்சுமி பதிவிட்ட ஆடம்பரமான புகைப்படம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தையும், ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், தனது ரசிகர் ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இந்தியத் திரையுலகையே உலுக்கிய நிலையில், தர்ஷனின் ஜாமீன் தொடர்பான சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி தனது இணையப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அணிந்துள்ள உடைகள் மற்றும் உபகரணங்களின் மதிப்பு தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அவர் கையில் வைத்திருக்கும் ‘லூயிஸ் விட்டான்’ (Louis Vuitton) ரக கைப்பையின் மதிப்பு சுமார் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல அவர் அணிந்திருக்கும் பெல்ட் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை மதிப்புடையது என்றும், அவர் அணிந்துள்ள காலணிகள் மற்றும் ஆடைகள் வெளிநாட்டின் புகழ்பெற்ற நிறுவனங்களுடையவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை வழக்கில் கணவர் சிறையில் வாடும் வேளையில், எவ்விதக் கவலையுமின்றி இவ்வளவு ஆடம்பரமான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிடலாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படத்திற்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒருபுறம் சட்டச் சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், மறுபுறம் விஜயலட்சுமியின் இந்த ‘ஸ்டைலிஷ்’ புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை பவித்ரா கௌடாவுக்காக தான் தன்னுடைய ரசிகரை தர்ஷன் கொலை செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.