ஐபிஎல் 2026 தொடரின் 43-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் சுமாராக இருந்தாலும், கேப்டன் ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி 102 ரன்கள் குவித்து அணியை மீட்டது.
ஆட்டத்தின் நடுவே துருவ் ஜூரல் ஆட்டமிழந்த பிறகு, ரவீந்திர ஜடேஜா ஐந்தாவது வீரராகக் களமிறங்கினார். மைதானத்திற்குள் நுழைந்த ஜடேஜா, தனது வழக்கமான பாணியில் பேட்டை வாள் போலச் சுழற்றினார்.
அப்போது டெல்லி அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அருகில் இருந்தபோது, அவர் முகத்திற்கு அருகிலேயே ஜடேஜா பேட்டைச் சுழற்றி கிண்டல் செய்தார். இதற்குப் பதிலடியாக குல்தீப் யாதவ் ஜடேஜாவைத் தள்ளிவிட்டு விளையாடினார்.
இந்திய அணியின் சக வீரர்களான இவர்களின் இந்த கலகலப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம், டெல்லி அணிக்காகப் பந்துவீசிய குல்தீப் யாதவிற்கு இந்தப் போட்டி ஒரு சோதனையாகவே அமைந்தது. அவர் வீசிய 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 41 ரன்களை வாரி வழங்கினார்.
𝙈𝙖𝙨𝙩𝙞 𝙧𝙪𝙠𝙣𝙞 𝙣𝙖𝙝𝙞 𝙘𝙝𝙖𝙝𝙞𝙮𝙚…
Kuldeep Yadav & Ravindra Jadeja shared a fun moment in the middle of the game. 😅#TATAIPL 2026 ➡️ #RRvDC | LIVE NOW 👉https://t.co/cMKydi0l80 pic.twitter.com/6EijsAT5Nd
— Star Sports (@StarSportsIndia) May 1, 2026
“>
ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இடையே மைதானத்தில் நடந்த இந்த வேடிக்கையான தருணம், போட்டிக்கு நடுவே ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இறுதியில் ரியான் பராக்கின் அதிரடியால் ராஜஸ்தான் அணி வலுவான நிலையை எட்டியது.
